×

தெலுங்கானாவிற்கும் பரவியது ஒமிக்ரான் கொல்லுயிரி!: 24 வயது பெண் உள்பட இருவருக்கு தொற்று உறுதி..!!

தெலுங்கானா: தெலுங்கானா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் முதல் முறையாக ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரஸின் உருமாறிய புதிய வகை வைரஸ் ஒமிக்ரான், 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில், இந்தியாவில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் பரவி உள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு  கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், தற்போது முதல் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி கென்யாவில் இருந்து தெலுங்கானா திரும்பிய 24 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவரது மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. இதைபோல் ஒமிக்ரான் தொற்று உறுதியான மற்றொருவர் சோமாலியாவில் இருந்து நாடு திரும்பியவர் ஆவார்.

 இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் தெரிவித்துள்ளார். இதேபோன்று அபுதாபியில் இருந்து ஹைதராபாத் வழியாக மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் திரும்பிய 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. குழந்தையின் பெற்றோருக்கு தொற்று இல்லாத நிலையில் முர்ஷிதாபாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Telangana , Telangana, Omigran, two vulnerabilities
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...