×

'ஊழல்வாதிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது': புகார்கள் அடிப்படையில் தான் ரெய்டு நடைபெறுகிறது..அமைச்சர் எ.வ. வேலு பேட்டி!!..

செங்கல்பட்டு: அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற  ஊழல் புகார்களின் அடிப்படையில் தான் அதிரடி சோதனைகள் நடைபெறுகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், நாள்தோறும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை சமாளிக்க கைவிடப்பட்ட மேம்பால பணிகளுக்கு மீண்டும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு பங்கேற்று சுமார் 163 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகளை துவங்கி வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் அ.தி.மு.க அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடப்பது புதிதல்ல எனவும், தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது எனவும்  எச்சரிக்கை செய்தார். தமிழ்நாட்டில் மழைக்காலம் இன்னும் முழுமையாக முடிவடையாத காரணத்தினால் தான் சாலைகளை செப்பனிடும் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் புனரமைக்கப்ப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags : Reid ,Minister ,A. V.V Velu , 'Corrupt, law abiding, complaints, raid, Minister E.V.Velu
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...