ஸ்பெயினில் 4 நூற்றாண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 87 நாட்கள் வெடித்த எரிமலை: எரிமலை சாம்பல்கள் ஆபத்து விளைவிக்குமா என அதிகாரிகள் ஆய்வு

மாட்ரிட்: ஸ்பெயினில் உள்ள தம்பரே வினையெச்ச எரிமலை பல நூற்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடர்ந்து நீண்ட நாட்கள் வெடித்து சிதறிய நிலையில் தற்போது சீற்றம் தணிந்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் லா பால்மா தீவில் உள்ள தம்பரே வினையெச்ச எரிமலை கடந்த செப்டெம்பர் 19-ம் தேதி வெடிக்க தொடங்கியது. தொடர்ந்து 87 நாட்கள் வெடித்த எரிமலை புதிய சாதனை படைத்துள்ளது.

4 நூற்றாண்டுகளுக்கு இதே எரிமலை தொடர்ந்து 83 நாட்கள் வெடித்து சிதறியது குறிப்பிட்ட தக்கது. எரிமலை சீற்றம் கிட்டதட்ட குறைந்துள்ள நிலையில் நகரை சூழ்ந்தா எரிமலை சாம்பல்களை அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

தம்பரே வினையெச்ச எரிமலையில் இருந்து வெளியேறிய தீப்பிழம்புகள் கடலில் கலந்து விஷ புகையை வெளியிட்டதால், கடலோர நகரங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து சீற்றம் தனித்திருக்கும் நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள சாம்பல்கள் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த்துமா என அதிகாரிகளை ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: