குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கேப்டன் வருண்சிங் உயிரிழப்பு

பெங்களூரு: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கேப்டன் வருண்சிங் உயிரிழந்தார். பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வருண்சிங் உயிரிழந்தார். குன்னூர் அருகே நிகழ்ந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில், பயணம் மேற்கொண்ட 14 பேரும் உயிரிழந்துள்ளனர். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் டிசம்பர் 8ல் காலமான நிலையில் வருண்சிங் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். கேப்டன் வருண் சிங் மரணத்தை அடுத்து ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

முதலில் வருண் சிங் மீட்கப்பட்டு குன்னூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் 80% தீக்காயமடைந்த வரும் சிங்கிற்கு பெங்களுருவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது காலமாகியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் கடுமையான தீக்காயங்களால் வருண் சிங் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குரூப் கேப்டன் வருண் சிங் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வீரத்துடன் நாட்டிற்காக வருண் சிங் செய்த சேவையை என்றும் மறக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேப்டன் வருண் சிங் பெருமையுடனும் வீரத்துடனும் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளார் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி தெரிவித்தார்.

Related Stories: