×

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை குறித்து விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நோட்டீஸ்..!!

டெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை குறித்து விவாதிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நோட்டீஸ் அளித்துள்ளார். மக்களவையில் ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அக்டோபர் 3ம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரியில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. அப்போது ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜீப் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதன்பின் ஏற்பட்ட கலவரத்தில் 4 பேர் அடித்து கொல்லப்பட்டனர். இதுகுறித்து உத்திரப்பிரதேச அரசு 9 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதை தொடர்நது, லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை, கவனக்குறைவால் நிகழ்ந்த மரணங்கள் இல்லை. திட்டமிட்ட சதி என்று சிறப்பு புலனாய்வு குழு நேற்று கூறியிருந்தது. இதனால் அஜய் மிஸ்ரா உள்பட 13 பேருக்கும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இன்றைய மக்களவை கூட்டத்தில் லக்கிம்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மானத்தை மக்களவை செயலாளரிடம் அளித்துள்ளார். நோட்டீஸில், அவையின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைக்க வேண்டும்.

லக்கிம்பூர் விவகாரம் குறித்து விசாரணை குழுவின் அறிக்கையை விவாதிக்க வேண்டும். விவசாயிகள் படுகொலை தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அஜஸ் மிஸ்ரா, ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அமைச்சர் அஜஸ் மிஸ்ராவை ஒன்றிய அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.


Tags : Ragul Gandhi ,Parliament ,Lakkimpur , Lakhimpur Farmers Massacre, Parliament, Rahul Gandhi
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...