×

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஆப்கன்!: டாலருக்கு நிகரான ஆப்கானி பண மதிப்பு கடும் சரிவு..!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் டாலருக்கு நிகரான ஆப்கானி பண மதிப்பு கடும் சரிவை கண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், உணவு பொருட்கள், எரிபொருட்கள் விலை அதிகரித்து பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. சர்க்கரை மூன்று மடங்கும், கோதுமை 40 விழுக்காடும், அரிசி 15 விழுக்காடும் அதிகரித்துள்ளது. சுமார் 98 விழுக்காடு மக்களுக்கு முழுமையான உணவு கிடைப்பது இல்லை என உலக உணவு அமைப்பு மதிப்பிட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மையும் பன்மடங்கு பெருகியுள்ளது. இந்நிலையில் டாலருக்கு நிகரான ஆப்கானி பண மதிப்பு ஒரேநாளில் 12 விழுக்காடு சரிவை கண்டுள்ளது.

தலைநகர் காபூலில் உள்ள சராய்சாஷ்டா பணம் சந்தையில் திங்கட்கிழமை டாலருக்கு நிகரான பண மதிப்பு 74 ஆப்கானியாக இருந்த நிலையில், மதியம் 125 ஆப்கானியாக சரிந்தது. இதனையடுத்து ஆப்கன் மத்திய வங்கி எடுத்த உடனடி நடவடிக்கையால் டாலருக்கு நிகரான பணமதிப்பு 114 ஆப்கானியாக ஓரளவு கட்டுக்குள் வந்தது. ஆப்கானி பணமதிப்பு மேற்கொண்டு வீழாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஆப்கன் மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.


Tags : Afghans , Economic crisis, dollar, Afghan currency value
× RELATED 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்ட நிலையில்...