திருப்போரூர் பேரூராட்சியில் சமுதாயக்கூடம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு: அமைச்சர் தா.மோ அன்பரசன் பங்கேற்பு

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம் மற்றும்  குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். திருப்போரூர் பேரூராட்சி கண்ணகப்பட்டு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ15.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், பாலாஜி நகரில் ரூ6.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார்.

எம்பி செல்வம், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், துணைத் தலைவர் சத்யா சேகர், மாவட்டக்குழு துணைத் தலைவர் காயத்ரி அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் வரவேற்றார். இதில், தமிழ்நாடு ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலந்து கொண்டு சமுதாயக்கூடம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், நகர திமுக செயலாளர் தேவராஜ், நகர துணைச் செயலாளர் ஒய்.மோகன், இளைஞர் அணி அமைப்பாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் நன்றி கூறினார்.

Related Stories: