இந்தியா - கொரியா டிரா

வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று தொடங்கிய ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடரில், நடப்பு சாம்பியன் இந்தியா - கொரியா மோதிய லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்தியா சார்பில் லலித் உபாத்யாய் (4வது நிமிடம்), ஹர்மான்பிரீத் சிங் (18வது நிமிடம்) கோல் அடித்தனர். கொரியா தரப்பில் ஜாங்யுன் ஜங் (41’), சுங்யுன் கிம் (46’) கோல் போட்டனர். 2-0 என்ற முன்னிலையை வீணடித்து வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்ட இந்தியா, இன்று வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

Related Stories: