டிவிட்டரில் சர்ச்சை கருத்து: யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து

மதுரை: மதுரை, திருப்பாலை, அழகர்கோவில் நகரை சேர்ந்தவர் யூடியூபர் மாரிதாஸ். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தது தொடர்பாக மதுரை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரி மாரிதாஸ் தரப்பில் ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘டிவிட்டரில் பதிவிட்ட கருத்திற்காக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது செல்லாது என்பதால் மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டார்.

Related Stories: