×

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தங்கத்தேர் வீதியுலா: அமைச்சர் சேகர்பாபு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

சென்னை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.11.58 லட்சம் செலவில் சீர்செய்யப்பட்டு தங்கத்தேரை வடம்பிடித்து அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வெள்ளித்தேர் ரூ. 18.30 லட்சம் செலவில் தயார் செய்யும் பணியினையும் அவர் தொடங்கி வைத்தார். திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் தங்கரதம் கடந்த 1972ம் ஆண்டு செய்யப்பட்டது. இத்தங்கத்தேர் பல வருடங்களாக பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் தங்கத்தேரின் மரபாகங்கள் பழுது அடைந்ததால் உற்சவம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. தங்கரதத்தில் உள்ள பழுதுகளை நீக்க ஏதுவாக 23.3.2017 அன்று தங்கரதத்தில் தங்கரேக் பதிக்கப்பட்ட தகடுகளை குடைகலசம் முதல் சுவாமிபீடம் வரை உள்ள செப்புத்தகடுகள் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இக்கோயிலில் 2.7.2021 அன்று ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்துள்ள தங்கரதத்தின் பணிகளை விரைந்து முடித்து திருத்தேர் வீதி உலா வர அறிவுரை வழங்கினார்.

அதன்படி ரூ. 4.75 லட்சம் செலவில் மரத்தால் ஆன தேர் பணிகள் முடிக்கப்பட்டு புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டு, தங்கரேக் பதித்த செப்பு உலோகத் தகடுகள் பொருத்துவதற்கு ரூ.4.33 லட்சம் மதிப்பீட்டிலும், தங்கத்தேருக்கான மின் அலங்காரம் செய்யும் பணி ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டிலும், தங்கத்தேர் மண்டபத்திற்கான ரோலிங் ஷட்டர் சீரமைக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.11.58 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரர் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டு தங்கத்தேர் சீரமைக்கப்பட்டுள்ளது. தங்கத்தேரை வடம்பிடித்து அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வெள்ளித்தேர் ரூ. 18.30 லட்சம் செலவில் தயார் செய்யும் பணியினையும் அவர் தொடங்கி வைத்தார்.

Tags : Thiruthani Subramania Swamy Temple ,Thangather Road ,Minister ,Sekarbabu , Thangather Road after 4 years at Thiruthani Subramania Swamy Temple: Minister Sekarbabu started holding the rope
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...