டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் 11 பேர் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட மேலாளர்களை பணியிட மாற்றம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்ட உத்தரவு: திருநெல்வேலி மாவட்ட மேலாளர் ஷியாம் சுந்தர் கடலூருக்கும், திண்டுக்கல் மாவட்ட மேலாளர் ஐயப்பன் கிருஷ்ணகிரிக்கும், காஞ்சிபுரம் (வடக்கு) மாவட்ட மேலாளர் மகேஷ்வரி தர்மபுரி மாவட்டத்திற்கும், காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்ட மேலாளர் கந்தன் திருநெல்வேலிக்கும், கடலூர் மாவட்ட மேலாளர் ரவிக்குமார் விருதுநகருக்கும், ராமநாதபுரம்  மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன் திண்டுக்கல்லுக்கும்,  கிருஷ்ணகிரி மாவட்ட மேலாளர் புஷ்ப லதா காஞ்சிபுரம் (வடக்கு) மாவட்டத்திற்கும், தர்மபுரி மாவட்ட மேலாளர் கேசவன் காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்டத்திற்கும், அரக்கோணம் மாவட்ட மேலாளர் முருகன், தூத்துக்குடிக்கும், விருதுநகர் மாவட்ட மேலாளர் செங்கிஸ்கான் அரக்கோணத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட மேலாளர் ஐயப்பன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: