×

குரூப்-1 முதன்மை தேர்வு மார்ச் 4,5,6 தேதிகளில் நடைபெறும்.! 3,800 பேர் தேர்வு எழுதுகின்றனர்; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மை தேர்வு மார்ச் 4,5,6 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் -1 வரிசையில் வரும் 66 பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல்நிலை தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற 3,800 பேருக்கான முதன்மை தேர்வு அடுத்தாண்டு மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழைகளை வரும் 22-ல் இருந்து ஜனவரி 5-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டி.என்.பி.எஸ்.சி அறிவுறுத்தியுள்ளது.

Tags : DNSC , Group-1 primary examination will be held on March 4,5,6! 3,800 are writing the exam; DNPSC Notice
× RELATED மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும்...