அவிநாசி அருகே வீட்டில் பதுக்கிய ரூ.40 லட்சம் புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் : ராஜஸ்தான் வாலிபர் கைது

அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் வீட்டில் பதுக்கிய ரூ.40 லட்சம் மதிப்புள்ள புகையிலை  பாக்கெட்டுகளை அவிநாசி போலீசார்  பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரியை போலீசார்  கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தெக்கலூர் பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்.பி. பவுல்ராஜ் உத்தரவின் பேரில் அவிநாசி எஸ்ஐ அமலாரோக்கியதாஸ் மற்றும் போலீசார்குழுவினர் விரைந்து சென்று தெக்கலூர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்தவரை அவிநாசி போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ராஜஸ்தானை சேர்ந்த சம்புசிங் (30) என்பது தெரியவந்தது. மேலும் இவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரத்து 102 புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories: