×

தெருவில் போகிற நாய் எல்லாம் கட்சி பதவிக்கு போட்டியிடலாமா?: மீண்டும் ‘திண்டுக்கல்’ சர்ச்சை பேச்சு

மதுரை: மதுரையில் நடந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்தவரையே ‘தெருவில் போகிற நாய்’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட சார்பில் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் திருப்பரங்குன்றத்தில் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தவரை விரட்டி விட்டார்கள் என கூறுகின்றனர். அதிமுகவில் தகுதி படைத்தவர்கள் உள்ளனர். தகுதியற்றவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை. அதிமுகவில்தான் யார் வேண்டுமானாலும் பதவிக்கும், தலைமை பொறுப்புக்கும் வரலாம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எடப்பாடி, ஓபிஎஸ். ஆனால் அதே நேரத்தில் தகுதியே இல்லாத ‘தெருவில் போகிற நாய்’ நானும் தேர்தலில் நிற்பேன் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் நம் தொண்டர்கள் அவர்களை விரட்டி விட்டனர். வருகின்ற மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் உறுதியுடன் ஒற்றுமையாக இருந்தால் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுவிடலாம்’ என்றார். சர்ச்சை பேச்சுக்கும் உளறலுக்கும் பஞ்சமில்லாதவர் திண்டுக்கல் சீனிவாசன். இதற்கு முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இட்லி சாப்பிட்டார் என்று பேட்டியளித்தார். பின்னர், ‘சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் கூறியதெல்லாம் பொய்’’ என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். மேலும் ‘‘ஜெயலலிதா கொள்ளையடித்ததை டிடிவி தினகரன் செலவு செய்கிறார்’’ என்று பொதுக்கூட்டத்திலேயே பேசி, புயலை கிளப்பினார். இந்த வரிசையில் இப்போது மீண்டும் ஒருமையில் ‘நாய்’ என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Tags : Dindukkal , Street, Dog, Party Position, Compete, ‘Dindigul’
× RELATED திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்கள் 70 கிலோ பறிமுதல்: மாநகராட்சி அதிரடி