×

கெடுவான் கேடு நினைப்பான்!: சீனாவில் முதல் முதலாக ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி..!!

பெய்ஜிங்: உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று சீனாவில் முதல் முதலாக ஒருவருக்கு உறுதியாகி இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக உலகை பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவில் இருந்தே பரவியது என்பது பலரது வாதமாக இருந்து வருகிறது. ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என பலவாறு உருமாற்றம் அடைந்து பரவிய அந்த தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகளும் வந்துவிட்டன. இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றமான ஒமிக்ரான் தொற்று பல நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக தடம் பதிக்க தொடங்கியுள்ளது. தென்னாபிரிக்கா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது கொரோனா தொற்றுக்கு காரணமாக கூறப்படும் சீனாவில் முதல் முதலாக ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.

வடக்கு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரை சேர்ந்த ஒருவருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாத நிலையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு ஒன்றில் இருந்து அவர் திரும்பியதாகவும், பரிசோதனையில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி இடத்தில் வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து துறைமுக நகரான தியான்ஜினில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


Tags : Omigron ,China , In China, the impact of Omigron
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா