2022 மார்ச்சில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வருகை; 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது

காபூல்: மார்ச் 2022ல் இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது என ஆப்கான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. வரும் 2022-23ம் ஆண்டுக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணையை நேற்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் உறுதி செய்யப்பட்ட போட்டிகள் குறித்து அறிவித்துள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், மேலும் பல்வேறு நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதன் அடிப்படையில் இறுதியான போட்டி அட்டவணை பட்டியல் அடுத்த மாதம் வெளியாகலாம் என்றும் தெரிவித்துள்ளது.

நேற்று வெளியான போட்டி அட்டவணைப்படி, ஆப்கான் கிரிக்கெட் அணி வரும் 2022 மார்ச்சில் இந்திய மண்ணில் பயணம் மேற்கொண்டு, இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது  என்றும் போட்டிகளுக்கான தேதிகள் மற்றும் இடங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும்  என்றும் ஆப்கன் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்திய பயணம் தவிர ஆப்கான் கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடவுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: