×

பெகாசஸ் மென்பொருள் விற்பனையை நிறுத்தத் திட்டம்: முக்கிய பிரமுகர்கள் வேவு பார்க்கப்பட்டதால் சிக்கலில் என்எஸ்ஓ

ஜெருசலேம்: பெகாசஸ் எனப்படும் வேவு பார்க்கும் மென்பொருளை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்ததன் மூலம் உலகம் முழுவதும் சலசலப்பை உருவாக்கிய N.S.O நிறுவனம் விரைவில் மூடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெகாசஸ் என்னும் வேவு மென்பொருளை இந்தியா உள்ளிட்ட அரசுகளுக்கு இஸ்ரேலிய நிறுவனமான N.S.O விற்பனை செய்தது. இந்த ஸ்பைவேர் மூலம் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் வேவு பார்க்கப்பட்டது உறுதியானது.

இதன் காரணமாக N.S.O நிறுவனமும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது கடன் சுமை ஏற்பட்டு இருப்பதால் பெகாசஸ் மென்பொருள் விற்பனையை ரத்து செய்வதோடு நிறுவனத்தையும் மூட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் உட்பட நிதி வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. குற்றங்களை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்தை தடுப்பதற்காகவே உலக அரசுகளுக்கு பெகாசஸ் மென்பொருள் விற்பனை செய்யப்பட்டதாக N.S.O நிறுவனம் விளக்கமளித்தது.

இருப்பினும், இந்த நிறுவனத்தை அமெரிக்கா தனது கருப்புப்பெட்டியில் வைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனமும் தனது தயாரிப்பை N.S.O பயன்படுத்தக்கூடாது என கூறி வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக 450 மில்லியன் டாலர் கடனில் மூழ்கியுள்ள N.S.O, பெகாசஸ் நிறுவனத்தை மூட அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.


Tags : Pegasus ,NSO , Pegasus, software, key figures, spy, NSO
× RELATED கட்சி தாவினால் பதவியிழக்கும் வகையில்...