மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி; 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி .! ரிஸ்வான், ஹைதர் அலி அதிரடி

கராச்சி: கராச்சியில் நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது. பாக். அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ரிஸ்வானும், ஹைதர் அலியும் அதிரடியாக ஆடி முறையே 78 மற்றும் 69 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் நேற்று மாலை துவங்கியது. இதில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஓபனர்களில் கேப்டன் பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தார். ஆனால் ரிஸ்வான் அதிரடியாக ஆடி, 52 பந்துகளில் 78 ரன்களை விளாசினார். மிடில் ஆர்டரில் இறங்கிய பாக். அணியின் இளம் வீரர் ஹைதர் அலி தன் பங்கிற்கு 39 பந்துகளில் 68 ரன்களை குவிக்க, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு பாக். அணி 200 ரன்களை எடுத்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மே.இ.தீவுகள் அணியின் பேட்ஸ்மென்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஓபனராக இறங்கிய ஷாய் ஹோப் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக ஓடியன் ஸ்மித் 24 ரன்களும், ரோவ்மான் பவெல் 23 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் வெளியேற மே.இ.தீவுகள் அணி 19 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதையடுத்து இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாக். அணியின் பவுலர்களில் மொகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளையும், ஷதப் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக பாக். அணியின் பேட்ஸ்மேன் ஹைதர் அலி தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி, இன்று மாலை 6 மணிக்கு இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related Stories: