×

நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு?: மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருச்சி: நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேரின் மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனையில் கோவிட் நுரையீரல் மறுவாழ்வு மையம் மற்றும் புற்றுநோய் உற்றுநோக்கு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த ஒருவருக்கும், அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும் எஸ் ஜீன் மாறுபாடு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அனைவரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் மாலை அல்லது நாளைக்குள் தெரியவரும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


Tags : Chennai ,Nigeria ,Minister ,M. Subramanian , Tamil Nadu, Omigron, Models, Ma. Subramanian
× RELATED அண்ணாமலை என்ன ஜோசியரா?: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி