தொடர்மழையால் திருவில்லிபுத்தூர் திருமுக்குளம் நிரம்பியது-பெரியகுளம் கண்மாயும் ‘புல்’

திருவில்லிபுத்தூர் : தொடர் மழையால், திருவில்லிபுத்தூரில் திருமுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் நிரம்பி வழிகின்றன. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அணைகள், நீர்த்தேக்கங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்

ளன.

திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் நிறைந்து வழிகின்றன. குறிப்பாக திருவில்லிபுத்தூர் கம்மாபட்டி சாலையில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கின்றன. நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: