×

குச்சனூரில் சாலையோரம் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதாரக்கேடு-கடைக்காரர்கள், பொதுமக்கள் அவதி

சின்னமனூர் : சின்னமனூர் அருகே, குச்சனூர் பேரூராட்சியில் சாலையோரம் தேங்கியிருக்கும் கழிவுநீர் தேக்கத்தால் பொதுமக்கள், கடைக்காரர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் ராஜபாளையம், துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பேரூராட்சியில் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு முல்லை அருவியும் சுருளி அருவியும் இணையும் சுரபி நதிக்கரையில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் உள்ளது.

இதனால், தமிழக அரசு பேரூராட்சியை கோயில் நகரமாக அறிவித்து சுற்றுலாத்தலமாக மேம்படுத்தியுள்ளது. தேனியிலிருந்து சின்னமனூருக்கு செல்லும் மெயின் ரோட்டில் குச்சனூர் இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், மெயின்ரோட்டின் இருபுறமும் குறுகிய கழிவுநீர் வாறுகாலை அகற்றி, அகன்ற வாறுகாலாக அமைத்தனர். குறிப்பாக சனீஸ்வரன் பகவான் கோயில் அருகே, கழிவுநீர் வாறுகாலை அகலமாக அமைத்து அதன்மேல் பாலம் அமைத்துள்ளனர். சாலையிலிருந்து வாறுகால் உயரமாக இருக்கிறது. இதனால், சாலையோரம் தேங்கும் மழைநீர் நாளடைவில் கழிவுநீராக மாறுகிறது.   

மெயின் ரோட்டில் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து தேங்குகிறது. இதில் துர்நாற்றம் வீசுகிறது; கொசுக்கள் உருவாகி அருகில் குடியிருப்போருக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும், சாலையோரம் உள்ள கடைக்காரர்களும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையோரம் தேங்கும் கழிவுநீர், மழைநீர் வாறுகாலில் கலக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kuchanur , Cinnamanur: Near Cinnamanur, the public, due to the roadside stagnant sewage in Kutchanur municipality
× RELATED தேவாரம் பகுதியில் குறைந்து வரும் நாட்டு கோழி வளர்ப்பு