×

மண்ணின் வளத்தை நிலைநிறுத்தும் உரம் பழம், காய்கறி கழிவுகளை எருவாக மாற்றும் மண்புழு-தோட்டக்கலை உதவி இயக்குனர் தகவல்

மன்னார்குடி : மன்னார்குடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : மண்ணுக்கு தாய்ப்பால் இயற்கை எரு. நாம் அதிக அளவில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை விட இயற்கையில் கிடைக்கும் தொழு எரு, தலை எரு ஆகியவற்றை பயன்படு த்து வது தான் பயிர்களுக்கும் நிலத்துக்கும் ஏற்றது. இதனை நாம் சுலபமாக தயாரிக்கலாம். பழங்காலத்தி லிருந்து மண்புழுவை விவசாயி நண்பன் என வும், மண்ணின் வளத்தை திரும்ப நிலைநிறுத்தும் உரம் எனவும் அறியப்பட்டு வருகிறது.

நமது வீடுகளில், தோட்டத்தில் தினமும் கிடைக்கும் காய்கறி கழிவுகள் ,தோட்டக் கழிவுகள், காகிதக் குப்பைகள் போன்ற இயற்கை கழிவுகளை மண்புழுக் கள் உதவியுடன் இயற்கை உரமாக தயாரிப்பதுதான் மண்புழு உரம் ஆகும். முதலில் மண்புழு தேர்வு செய்தல்,, மண்புழு பொதுவாக இரண்டு இரகங்கள் தமிழ்நாட்டில் வளர்க்க ஏற்றவையாகும். ஒன்று எய்சீனியா பீட்டிடா மற் றொ ன்று யூடிரலஸ் யூஜினே ஆகிய இரண்டில் ஒன்றினை நாம் தேர்வு செய்யலாம்.

எரு படுக்கைக்கு தேவையான சாணத்தை 15 நாட்கள் நிழலில் உலர வைத்து தூள் செய்து கொள்ள வேண்டும் இதற்கு சாண எரு குழியிலிருந்து உலர்ந்த சான கட்டிகளை தூள் செய்தும் பயன்படுத்தலாம். முதலில் சிமெண்ட் தொட் டியின் அடிப்பாகம் சமமாக இருக்குமாறு பரப்ப வேண்டும். இதன்மீது பதப் படுத்தப்பட்ட குப்பையினை பத்து சென்டிமீட்டர் உயரத்திற்கு பரப்ப வேண்டும். அதன்மேல் மூன்று சென்டிமீட்டர் உலர்ந்த சாணி தூளை பரப்பவும்.

இதன் மேல் சாணி பாலுடன் புளித்த மோரைக் கலந்து தெளிக்கவும்.இவ்வாறு குப்பை - சாணம் - சாணிப்பால் என எரு படுக்கையை குழி நிறை யும் அளவிற்கு தயார் செய்து கொள்ளவும்.இந்த எரு படுக்கையிணை கோணி சாக்கினால் மூடி 15 நாட்களுக்கு தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். அதன் பிறகு சுமார் கால் கிலோ வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து எரு படுக்கையின் மேல் தெளிக்கவும்.

பின் சுமார் 1000 புழுக்களை படுக்கை யின் மீது பரவலாக விட வேண்டும். குழியினை ஈர சாக்கு அல்லது வைக் கோல் கொண்டு மூடவேண்டும். பிறகு குழியைச் சுற்றிலும் எறும்புகள் போ காதவாறு லிண்டேன் தூள் மருந்தினை தூவவேண்டும். அவ்வப்போது தண் ணீர் தெளித்து அறுவடை வரை படுக்கை யின் ஈரப்பதத் தின்னை 40 முதல் 50 சதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 30 லிருந்து 45 நாட்களுக்குள் மண்புழு எரு குருணைகாளாக மாறிவிடும். இதுவே இதன் அறுவடை தயார் நிலையை குறிக்கும். கழிவுகள் முழுவதும் உரமாக உருவான பின்னர் மூன்று நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் மேல் அடுக்குகளில் உள்ள மண் புழுக் கள் கீழே சென்று விடும் படுக்கையின் மேல் உள்ள எருவை சேகரித்து 3 மில்லிமீட்டர் அளவுள்ள சல்லடையில் சலிக்க வேண்டும்.
இவ்வாறு அறுவடை செய்த எருவினை தேவையான பைகளில் சேமித்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம் அல்லது விற்பனை செய்யலாம். மண்புழு பொதுவாக ஆயிரம் டன் ஈர கழிவுகளை 300 டன் எருவாக மாற்றும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Assistant Director ,Earthworm , Mannargudi: In a press release issued by the Mannargudi Regional Assistant Director of Horticulture Prince: to the soil
× RELATED இயற்கை விவசாயம் செய்திட பசுந்தாள்...