அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு உகந்தது இல்லை என்று தள்ளுபடி செய்தது நீதிமன்றம். அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. பன்னீர்செல்வம், பழனிச்சாமி தேர்வை ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது என்று அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். ஜெயச்சந்திரன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தள்ளுபடி செய்தது.

Related Stories: