×

பொருளாதார நெருக்கடியால் 30 ஆண்டுக்கு முன் நான் டிரைவர்!: அதிரவைத்த ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பிறகு பொருளாதார நெருக்கடி காரணமாக தான் கார் ஓட்டுநராக பணியாற்றியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். 1991ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் ரஷ்யா உள்பட 15 நாடுகளாக பிரிந்தது. இந்நிலையில், புதின் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி குறித்து ஆவண படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.  இதில் தோண்றி பேசி இருக்கும் புதின், டிரைவராக பணியாற்றியது குறித்து பேச தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அது தான் உண்மை என குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவு பொருள் ஈட்டும் நிர்பந்தம் ஏற்பட்டதால் தனியார் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டுநராக பணியாற்றியதாக புதின் கூறியிருக்கிறார்.

அந்த காலத்தில், ரஷ்யாவில் டாக்சி உபயோகிப்பது அரிதானது. தனிப்பட்ட நபர்கள் பலரும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக, முன்பின் அறியாதவர்களுக்காக டாக்சி ஓட்டுவார்கள். சிலர், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களையும் டாக்சியாக பயன்படுத்தினார்கள் என்றும் புதின் குறிப்பிட்டிருந்தார். முப்பத்தாண்டுக்கு முன் நடந்த அந்த நிகழ்வு பெரும்பாலான குடிமக்களுக்கு இன்னும் துயரமாகவே உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.  உலகின் மிக பவர்புல்லான தலைவர்களில் ஒருவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். 69 வயதாகும் விளாடிமிர் புதின், இதுவரை 4 முறை அதிபராகவும் ஒரு முறை பிரதமராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Russian ,President ,Putin , 30 years, driver, Russian President Putin
× RELATED கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த தேர்தல் மீண்டும் ரஷ்ய அதிபராகிறார் புடின்