×

ஸ்ரீநகரில் போலீசார் வாகனம் மீது பயங்கரவாதிகள் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நேற்றிரவு போலீசார் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் போலீஸ் வாகனத்தில் ஆயுத படை போலீசார் சென்று கொண்டிருந்தனர். பந்தா சதுக்கத்தில் உள்ள சிவாக் பகுதியில் பேருந்து வந்தபோது திடீரென பேருந்தின் மீது தீவிரவாதிகள் கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த தாக்குதலில் போலீசார் நிலைகுலைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.

இந்த தாக்குதலில் 3 போலீசார் உயிரிழந்த நிலையில் 13 போலீசார் காயமடைந்தனர்.இந்த நிலையில், போலீசார் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீநகரில் போலீஸ் வாகனம் மீது தீவிரவாதிகள் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தீவிரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன், என்று தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,M.C. ,Srinagar ,KKA Stalin , மு.க.ஸ்டாலின் ,கண்டனம்
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...