துரைசாமி பாலம் அருகே தி.நகர் சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

சென்னை: தி.நகர் துரைசாமி பாலம் அருகே உள்ள சாலையில் திடீரென 5 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தி.நகர் துரைசாமி பாலத்தில் இருந்து அசோக் நகர் செல்லும் பிருந்தாவனம் சாாலையில் நேற்று காலை திடீரென 5 அடி அகலத்திற்கு 3 ஆடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அசோக் நகர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

பின்னர், இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், பள்ளம் ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது தொடர் மழை காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டது தெரிந்தது. இதையடுத்து, பள்ளத்தை சிமென்ட் கலவையை கொண்டு நிரப்பினர். இதனால் தி.நகர் துரைசாமி பாலத்தில் இருந்து அசோக் நகர் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: