×

கோபி அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம்: தங்க புதையல் வதந்தியை நம்பி 10 அடி ஆழம் தோண்டிய அதிகாரிகள்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது எல்லமடை. இங்குள்ள கூகலூரில் கடந்த 34 ஆண்டுக்கு முன்பு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், சர்க்கரை ஆலையில் வேலை செய்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வீட்டு மனைகளை வழங்கியது. வீட்டுமனைகளை பெற்ற தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக வீட்டுமனை பெற்றவர்கள் நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரம் மூலமாக நிலத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்றியபோது, திடீரென ஒரு ஆள் இறங்கும் அளவிற்கு சுமார் 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் தங்க புதையல் இருப்பதாக தகவல் பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த கோபி வருவாய்த்துறை மற்றும் போலீசார் உடனடியாக எல்லமடை கிராமத்திற்கு  வந்து திடீர் பள்ளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பகுதி பாரி மன்னர் ஆட்சி செய்த பகுதி என்பதாலும், முன்பு சேர மன்னர்கள் ஆண்ட பகுதியாக இருப்பதாலும் புதையல் ஏதேனும் இருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டப்பட்டது. சுமார் 10 அடி ஆழத்திற்கு தோண்டியும் எதுவும் கிடைக்காத தால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.


Tags : Kobe , Erode District, Gold Treasure, Rumor
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்