×

லோக்பாலில் ஆன்லைன் புகார் வசதி தொடக்கம்

புதுடெல்லி ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது லோக்பாலில் தபால் மூலமாகவும், இமெயில் அல்லது கையில் ஒப்படைத்தல் மூலமாக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் லோக்பாலில் ஆன்லைன் மூலமாக புகார் தெரிவிக்கும் வகையில் லோக்பால் ஆன்லைன் என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், எந்த நேரத்திலும் ஆன்லைன் மூலமாக புகார்களை பதிவு செய்யலாம். அதிக வெளிப்படை தன்மை கொண்டது.

புகார் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். லோக்பால் ஆன்லைன் வசதியை லோக்பால் தலைவர் பினாகி சந்திர கோஸ் நேற்று தொடங்கி வைத்தார். புகார்  மீதான நடவடிக்கை குறித்து புகார் செய்தவருக்கு மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக தகவல் அனுப்பப்படும். புகார் செய்தவரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புகார் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் நினைவூட்டல்களை வழங்கும் வசதியும் உள்ளது. lokpalonline.gov.in என்ற இணையதளத்தில் புகார்களை பதிவிடலாம்.


Tags : Lokpal , Lokpal, online complaint
× RELATED ஒன்றிய அரசு செயலாளர்கள் மாற்றம்