×

உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் 2வது சுற்றில் கிடாம்பி

ஹுவல்வா: உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார். ஸ்பெயினில் நடைபெறும் இத்தொடரின் முதல் சுற்றில் உள்ளூர் வீரர் பாப்லோ அபியானுடன் மோதிய கிடாம்பி 21-12, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். மற்றொரு முதல் சுற்றில் இந்திய வீரர் சார் பிரனீத் 21-17, 7-21, 18-21 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் மார்க் கால்ஜூவிடம் போராடி தோற்றார்.


Tags : Kidambi ,World Championship Badminton , World Championship, Badminton
× RELATED இந்தோனேசியா மாஸ்டர்ஸ் கிடாம்பி, பிரணாய் அதிர்ச்சி தோல்வி