காயத்தால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்: ரோகித்துக்கு பதிலாக பிரியங்க் சேர்ப்பு

மும்பை, டிச. 14: பயிற்சியின்போது காயம் அடைந்ததால், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து துணை கேப்டன் ரோகித் ஷர்மா விலகியுள்ளார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பயிற்சி செய்தபோது துணை கேப்டன் ரோகித் ஷர்மா காயம் அடைந்தார். ஏற்கனவே கால் தசைநாரில் ஏற்பட்டிருந்த காயம் தீவிரமானதுடன், வலைப்பயிற்சியின்போது பந்து கையில் தாக்கியதாலும் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்க அணியுடன் நடக்க உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் விலகுவதாக கிரிக்கெட் வாரியம்  நேற்று அறிவித்தது. அவருக்கு பதிலாக பிரியங்க் பாஞ்ச்சால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்கா ஏ அணியுடன் சமீபத்தில் நடந்த தொடரில், பிரியங்க் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவர் 100 முதல்தர போட்டிகளில் விளையாடி 7011 ரன் (அதிகம் 314*, சராசரி 45.52, சதம் 24, அரை சதம் 25) விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: