அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் 1500 பேர் பாமகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

திருப்போரூர்: திருப்போரூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான பனங்காட்டுப்பாக்கம் அருண்குமார் கடந்த வாரம் தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் நேற்று அவரது தலைமையில் 10 ஊராட்சிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி மாம்பாக்கத்தில் நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார் வரவேற்றார்.

மாவட்டத் துணைச் செயலாளர் அன்புச்செழியன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பையனூர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஊரகத் தொழில்

துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் திருப்போரூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. அவைத் தலைவர் இராஜர், ஒன்றிய இளைஞர்அணி துணைச் செயலாளர் வினோத்குமார், ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் நரசிம்மன், ஒன்றிய மாணவர் அணி துணைச் செயலாளர் விக்கி, ஒன்றிய பொருளாளர் பிரேமா குணசேகரன் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர். முடிவில் சிறுங்குன்றம் ரோஹித்குமார் நன்றி கூறினார்.

Related Stories: