×

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் 1008 மஹா சங்காபிஷேகம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தன்று (கடைசி திங்கட்கிழமை) 1008 சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். அதேப்போல், இந்தாண்டு நேற்று 1008 மஹா சங்காபிஷேகம் மிகவும் விமரிசையாக நடந்தது. இதையொட்டி, முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பின்னர், பிற்பகல் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரருக்கு வேதங்கள் முழங்க மஹா சங்காபிஷேகம் நடந்தது. இதனை காண திருக்கழுக்குன்றம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து வேதகிரீஸ்வரரை வணங்கி பின்னர் வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். இந்த மஹா சங்காபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி குமரன் சிறப்பாக செய்திருந்தார்.

Tags : Maha ,Thirukkalukkunram Vedagriswarar Temple , Thirukkalukkunram Temple, Sangabhishekam
× RELATED குன்னம் அருகே மகா மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்