×

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி

வெல்வா: 26வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஸ்பெயினின் பாப்லோ அபியனுடன் மோதினார். இதில் 21-12, 21-16 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

தற்போது தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த், 36 நிமிடத்தில் வெற்றியை வசப்படுத்தினார். 2வது சுற்றில் அவர் சீனாவின் லி ஷி ஃபெங்கை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீரரான சாய் பிரனீத் முதல் சுற்றில், 21-17, 7-21, 18-21 என்ற  கணக்கில் நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவ்விடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

Tags : World Badminton Championships ,Kitambi Srikanth , World Badminton Championships; Kitambi Srikanth wins first round
× RELATED உலக பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி...