×

காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: விழாக்கோலம் பூண்டது வாரணாசி

லக்னோ: உத்திரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று(டிச.,13) திறந்து வைத்தார். இதற்காக விமானம் மூலம் வாரணாசி சென்ற பிரதமர் மோடியை உத்திரப்பிரேதச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலுக்கு சென்ற மோடி தீப ஆராதனை செய்து வழிபாடு நடத்தினார்.

பின்னர் படகில் சென்று, புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை திறந்து வைத்தார். இந்த வளாகம் கங்கை நதி கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீ நீளமும், 20 மீ அகலமும் கொண்ட நடைபாதையாகும். இதன் பிறகு 339 கோடி ரூபாய் செலவில் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ள கட்டுமான பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.


Tags : Kazi Viswanadar ,Modi ,Varanasi , Kasi Vishwanathar Temple, Prime Minister Modi, Varanasi, Kala Byrvar, Ganges River
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி...