சென்னை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம், காத்திருப்பு நேரம் பாதியாக குறைப்பு.! பயணிகள் நிம்மதி

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை, காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் பரவிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது பல நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியாவிலும் மகராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா உள்பட 12 நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்களில் சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய விமானநிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே RT PCR டெஸ்ட் எடுத்து நெகடீவ் ரிசல்ட் வந்த பிறகுதான் பயணிகளை வீடுகளுக்கு அனுப்பிவைக்கின்றனர். இதன்பிறகு அவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்கின்றனர். இதனால் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், சென்னை சர்வதேச விமானநிலையத்தில் கடந்த 1ம்தேதியில் இருந்து பயணிகளுக்கு டெஸ்ட் எடுக்கும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 6 மணி நேரம் விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். டெஸ்ட் கட்டணமும் ரூ.900 ஆக இருந்தது. தமிழ்நாடு அரசு சென்னை விமானநிலையம் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டிக்கு டெஸ்ட் கட்டணம் மற்றும் காத்திருக்கும் நேரங்களை குறைக்கும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து டெஸ்ட் கட்டணம் ரூ.900 லிருந்து ரூ.700 ஆக குறைக்கப்பட்டு, தற்போது ரூ.600 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் காத்திருக்கும் நேரம் 6 மணி நேரத்தில் இருந்து 5 மணியாக்கப்பட்டு தற்போது 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதிவேக டெஸ்ட்டான RAPID டெஸ்ட் கட்டணம் ரூ.4,500 லிருந்து ரூ.2,900 ஆக குறைத்துள்ளனர். அதற்கு காத்திருக்கும் நேரம் ஒரு மணி நேரத்தில் இருந்து 30 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் 12 மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாக விமானத்தில் அமர்ந்துவரும் பயணிகள், சென்னை விமானநிலையத்தில் மேலும் 3 மணி நேரம் சோதனை ரிசல்ட்டிற்காக இருக்கைகளில் அமர்ந்திருப்பதில் சிரமப்படுகின்றனர். வயதான பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து சென்னை சர்வதேச விமானநிலையத்தில் RT PCR டெஸ்ட் எடுத்து ரிசல்ட்க்காக காத்திருக்கும் பயணிகளின் வயதான பயணிகளுக்கு ஈசிசோ அமைப்பில் சாய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் அதிக ரிஸ்க் நாட்டில் இருந்து நீக்கப்பட்டதால் தற்போது டெஸ்ட் எடுக்கும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் பயணிகள் ரிசல்ட்க்காக காத்திருக்கும் கூடத்தில்  பயணிகள் நெரிசல் இல்லாமல் அமர்வது, சோதனைகள் நடத்துவது விரைந்து செயல்படுத்தப்படுகிறது. பயணிகள் காத்திருக்கும் கூடமும் இருக்கைகளில் அடிக்கடி கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது. இவற்றை கண்காணிக்க ஏர்போர்ட் அத்தாரிட்டி சிறப்பு பணியாளர்களை நியமித்துள்ளது.

Related Stories: