×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஏகாதசி திருவிழா, பகல் பத்து தினம் இன்றுடன் நிறைவு: நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு!!!



திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து தினம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. பூலோக வைகுண்டம் என்று போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத ஆலயத்தில் பிரசித்தி பெற்ற  வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3- ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து தினம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் நம்பெருமாள் நாச்சியர் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை 4 மணி 45 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவில் உட்புறத்தில் 117 சிசிடிவி கேமராக்களும், வெளிப்புறத்தில் 90 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப்போல சொர்க்கவாசல் திறக்கப்பட்ட பின்பே பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Ekadasi Festival ,Sriangam Ranganadar Temple , Srirangam, Ranganathar Temple, Ekadasi Festival, Ten Day Closing, Early Morning Gate Opening
× RELATED ஸ்ரீ ரங்கம் கோயிலில் இன்று...