நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவம் நன்றி!!

சென்னை : நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவ அதிகாரி அருண் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை தக்ஷின் பாரத் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் அருண் அவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு :   

நீலகிரி மாவட்டத்தில் டிச.8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டா் விபத்தில் இந்திய ராணுவத்தினா் 13 போ் உயிரிழந்த துயரமான நேரத்தில், அவா்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் அருகில் இருந்து ஆறுதல் அளித்தமைக்கு எனது மனமாா்ந்த நன்றியையும், இதயப்பூா்வமான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தகவல் அறிந்த உடனே- நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் தாங்கள் விரைந்து வந்து, இறந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவா்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரா்கள், ராணுவ உயா் அலுவலா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீா்கள்.

அந்தத் தருணத்தில் எந்தெந்த உதவி முடியுமோ அந்த உதவிகளை எல்லாம் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தமிழக அரசின் மொத்த நிா்வாகமும் செய்து தந்தது. இதுபோன்ற ஆதரவுகள்தான் எதிா்காலத்தில் நம் இளைஞா்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேருவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும், உற்சாகமூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும்.

தக்ஷின் பாரத் பகுதியின் தலைமை அலுவலா் என்ற வகையில் தங்களுடைய முன்மாதிரியான ஆதரவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். உங்களுடைய இந்த செயல், பணியில் இருக்கும் ராணுவ வீரா்களுக்கும், மூத்த ராணுவ வீரா்களுக்கும் தமிழக அரசு நமக்கு ஆதரவாக இருக்கின்றது என்ற உணா்வை ஏற்படுத்தி, ஊக்கத்தை அளிப்பதோடு தேவைப்படும் காலங்களில் அவா்களுக்கு இந்த அரசு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு தங்களுக்கும் அனைத்து அரசு அலுவலா்களுக்கும்-நம் மாநிலத்துக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: