×

முனைவர் பட்டம் பெற்ற சோழன் கல்விக்குழும தாளாளருக்கு பாராட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சோழன் கல்விக் குழுமம் சார்பில் பள்ளி, கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்விக் குழுமத்தின் தாளாளர் மற்றும் தலைவராக சஞ்சீவி ஜெயராம் உள்ளார். இவருக்கு நேற்று முன்தினம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.என்.ரவியிடம் இருந்து நேரடியாக கல்வியியல் துறைக்கான முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்ற சோழன் கல்விக் குழும தாளாளருக்கு, சோழன் கல்வியியல் கல்லூரி முதல்வர் அன்பு மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Tags : Chola ,Rector , PhD, Cholan Education Board Rector, Appreciation
× RELATED ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும்