பாலியல் வன்முறை எதிர்ப்பு மாநாடு

செங்கல்பட்டு: கல்வி நிலையங்களில் நடைபெறுகின்ற பாலியல் குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவர், வாலிபர், மாதர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் பாலியல் வன்முறை எதிர்ப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் நேற்று நடைபெற்ற இம்மாநாட்டிற்கு,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.ஜீவானந்தம் தலைமை தாங்கினார்.

இம்மாநாட்டில், கல்வி நிலையங்களில் ஆசிரியர் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை வகுப்புகள் நடத்திட வேண்டும், பள்ளி பாட புத்தகங்களில் பாலியல் கல்வியை இணைத்திட வேண்டும், இணையதளங்கள் மூலமாக நடைபெறும் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும், பெண்கள், பெண்குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகளை ஆறு மாதத்திற்குள் விசாரித்து தண்டனையை  உறுதிப் படுத்தவேண்டும், மாவட்டம் முழுவதும் கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விசாகா கமிட்டி அமைப்பதை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், ஆண், பெண் சமத்துவத்தை சமூகத்தில் நிலைநிறுத்த தொடர் நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இக்கோரிக்கைகளை விளக்கி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில்  மாநில துணை செயலாளர் மபா.நந்தன்,  மாவட்ட செயலாளர். க.புருசோத்தமன்,மாவட்ட பொருளாளர் இரா.சதீஷ், மாவட்ட துணை செயலாளர் மு.பிரியங்கா,  மாணவர் சங்கத்தின் மாநில துணை தலைவர்  க.நிருபன் சக்கரவர்த்தி,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கலையரசி, மாவட்ட துணை செயலாளர் ஜி.ஜெயந்தி, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.தமிழ்பாரதி, மாவட்ட தலைவர் க.ஆனந்தராஜ், சட்டக்கல்லூரி மாணவி சேஸ்டியா ஆகியோர் பேசினர்.

Related Stories: