பீகார் முன்னாள் காங். தலைவர் மகன் முதல்வர் நிதீஷ் கட்சியில் இணைந்தார்

பாட்னா:  பீகார் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவரின் மகன் தனது ஆதரவாளர்களுடன் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. பீகார் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சதானந்த் சிங். இவரது மகன் சுபானந்த் முகேஷ். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கஹால்கோனில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது தந்தை 8 முறை அங்கு வெற்றி பெற்று வரலாறு படைத்தவர்.  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சதானந்த் சிங் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது மகன் முகேஷ் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் நிதிஷின் ஐக்கிய ஜனதள கட்சியில் நேற்று இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில், ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் முன்னிலையில் ஐக்கிய ஜனதா தளத்தில் முகேஷ் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.

Related Stories: