தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசினார். அப்போது கவர்னரிடம் அண்ணாமலை மனு அளித்தார். கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக கூறி சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்தை தொடர்ந்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கிண்டி ராஜ்பவனில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.

அவருடன் பாஜ எம்எல்ஏ சரஸ்வதி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், டால்பின் ஸ்ரீதர், கு.க.செல்வம் சென்றனர். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடந்தது. தொடர்ந்து கவர்னரிடம், அண்ணாமலை மனு ஒன்றை அளித்ததாக தெரிகிறது.

Related Stories: