×

மு.க.ஸ்டாலின் தலைமையில் 18ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18ம் தேதி மாலை 5.30 மணி அளவில், சென்னை, ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும். அப்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,MK ,Stalin ,General Secretary ,Duraimurugan , 18th meeting of DMK district secretaries chaired by MK Stalin: Announcement by General Secretary Duraimurugan
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...