×

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புத்தாண்டில் அதிக அளவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு: தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் சுப்பா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின்போது தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள், மீனவர் அதிகம் உள்ள பின் தங்கிய பகுதிகளில் இருந்து தேவஸ்தானம் சார்பில் பேருந்தில் அழைத்து வரப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டது. அதேபோன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தரிசனத்திலும் அந்தப்பகுதியில் இருந்து அழைத்து வந்து சுவாமி தரிசனம் செய்து வைக்கப்பட உள்ளது.

கொரோனா பாதிப்பு குறைவதை கருத்தில் கொண்டு புத்தாண்டு தரிசனத்தில் அதிக பக்தர்களை அனுமதிக்கவும், ஜனவரி முதல் குறைந்த எண்ணிக்கையில் சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்கவும் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து அனுமதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ3 கோடியில் HVC,ANC,GNC மற்றும் இதர பக்தர்கள் ஓய்வறைகளில் பக்தர்களின் நலன் கருதி வாட்டர் ஹீட்டர்கள் அமைக்கப்படும். ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கைகளில் 2 நாணயங்கள் எண்ணும் மற்றும் தானியங்கி பேக்கிங் இயந்திரங்கள் ரூ.2.80 கோடியில் வாங்கப்பட உள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மலைப்பாதையில் சாலைகள் புனரமைக்க ரூ.3.95 கோடியிலும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை ரூ.3.60 கோடியிலும் சீரமைக்கப்பட உள்ளது. பக்தர்களிடம் மொட்டையடிக்கும் சவர தொழிலாளர்களுக்கு ஒரு மொட்டைக்கு ரூ.11-லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thirupathi , Decision to allow more devotees in the New Year to visit Tirupati Seven Hills: Devasthanam Info
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம்..!!