தூத்துக்குடிக்கு நாளை கவர்னர் ஆர்.என். ரவி வருகை

தூத்துக்குடி: தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நாளை தூத்துக்குடி வருகிறார். சென்னையிலிருந்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நாளை காலை 10 மணிக்கு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு 11 மணிக்கு தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து காரில் எட்டயபுரத்திற்கு சென்று அங்கு பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் திருச்செந்தூர் செல்லும் அவர் அங்கு ஓய்வெடுக்கிறார். மறுநாள் (செவ்வாய்) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமி  தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு விஜயநாராயணம் கடற்படை தளத்திற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவர்னர் வருகையையொட்டி தூத்துக்குடி, திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

Related Stories: