×

‘வாழ்க்கையில் நெருக்கமானவர்கள் பலரை இழந்து விட்டேன்’ பிபின் ராவத் மறைவு; அமைச்சரவை கூட்டத்தில் கண் கலங்கிய பிரதமர்

புதுடில்லி: பிபின் ராவத் மறைவை தொடர்ந்து அன்று மாலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, திடீரென கண் கலங்கினார். அப்போது, வாழ்க்கையில் நெருக்கமானவர்கள் பலரை இழந்து விட்டேன் என்றார். குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் இறந்தது, நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் விபத்து நடந்த அன்று மாலையில் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.

இதில் மூத்த மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர், ‘வாழ்க்கையில் எனக்கு நெருக்கமானவர்கள் பலரை இழந்து விட்டேன். அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், கோபிநாத் முண்டே ஆகியோர் நெருக்கமாக இருந்ததுடன் அறிவுரைகளையும் அளித்தனர். அவர்களை இழந்து விட்டேன். இப்போது முப்படை தளபதி பிபின் ராவத்’ என கூறிய அவர் கண் கலங்கினார்.

ஒரு நிமிடம் தன் பேச்சை நிறுத்தி அழுது விட்டார். சக அமைச்சர்களும் கலங்கி விட்டனர். பின் கண்ணீரை துடைத்தபடி பிரதமர் பேச்சை தொடர்ந்தார். ஜெனரல் பிபின் ராவத், பிரதமருக்கு நெருக்கமானவர். இவரது வீர மரணம் நாட்டிற்கு இழப்பு என்பது ஒரு பக்கம்; அதே நேரத்தில் பிரதமருக்கு பெரும் இழப்பு என்கின்றனர் மூத்த அதிகாரிகள்.

Tags : Bibin Rawat , ‘I have lost many close people in life’ Pipin Rawat’s demise; The eye-popping Prime Minister at the Cabinet meeting
× RELATED பிபின்ராவத் மரணம் தொடர்பாக சமூக...