பாஜக பொதுமக்கள் நலனுக்காக மட்டுமே பாடுபடுகிறது: ஜே.பி. நட்டா பேச்சு

லக்னோ: பாஜக பொதுமக்கள் நலனுக்காக மட்டுமே பாடுபடுகிறது என பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 350 தொகுதிகளை கைப்பற்ற ஆளும் பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக உத்தரபிரதேசத்தில் நடைபெறும் தேர்தல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ஏட்டா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா; நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் வாரிசு அரசியலையும், சாதி வெறியையும் மதப்பிரிவினையும் வளர்க்கின்றன. பாஜக மட்டுமே பொதுமக்கள் மற்றும் அவர்களின் நலனுக்காக பாடுபடுகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; அதிகாரத்தில் அமர்ந்து அமர்ந்து ஆட்சி செய்வது தங்கள் நோக்கமில்லை; நாட்டைப் பலப்படுத்த அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் எனவும் கூறினார்.

 

Related Stories: