100 இடங்களில் சரமாரியாக வெட்டி சுமை தூக்கும் தொழிலாளி கொடூர கொலை: கால் பாதத்தை வெட்டி எடுத்து சென்ற கும்பல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போத்தன்கோடு அருகே செம்பகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுதீஷ் (32). ஐஎன்டியுசி சுமை தூக்கும் தொழிலாளி. அவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த ஒரு ரவுடி கும்பலிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்தது, இதையடுத்து சுதீஷ் போத்தன்கோடு அருகே ஒரு உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்தார்.

இதை தெரிந்து கொண்ட ரவுடி கும்பல் நேற்று அங்கு சென்றது. அப்போது வீட்டின் வெளியே சுதீஷ் நின்று கொண்டிருந்தார். ரவுடி கும்பலை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் இன்னொரு உறவினர் வீட்டிற்குள் நுழைந்து கதவை தாழிட்டு கொண்டார். ஆனாலும் ரவுடி கும்பல் விடவில்லை. வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. பின்னர் சுதீசை சரமாரியாக 100 இடங்களில் வெட்டியது. தொடர்ந்து ஒரு கால் பாதத்தை வெட்டி எடுத்து கொண்டு வெளியே வந்தது கும்பல்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருத்து பைக், ஆட்டோவில் ஏறி தப்பி சென்று விட்டது. தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுதீஷை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே  தப்பி சென்ற ரவுடி கும்பல் 500 மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் கால் பாதத்தை வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனினிறி சுதீஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய ரவுடி கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த வேட்டையில் ரவுடி கும்பலை ேசர்ந்த கணியாபுரத்தை சேர்ந்த ரெஞ்சித் என்ற ஆட்ேடா டிரைவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: