×

ரொனால்டோ கோலால் மான்செஸ்டர் வெற்றி

இங்கிலீஸ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில், நேற்று நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் எப்சி 1-0 என்ற கோல் கணக்கில், நார்விச் சிட்டி எப்சி அணியை வீழ்த்தியது. மான்செஸ்டர் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 75வது நிமிடத்தில் பெனால்டிக் வாய்ப்பில் கோல் அடித்தார். இந்த சீசனில் இது அவர் அடித்த 13வது கோலாகும். மான்செஸ்டர் 16 போட்டியில் 12 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி என 38 புள்ளிகளுடன் முதல் இடதில் உள்ளன.

Tags : Manchester ,Ronaldo , Manchester win by Ronaldo goal
× RELATED கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லுாரி...