×

அம்பேத்கர் சிலை உடைப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமத்தில் ஏர்போர்ட் காலனி உள்ளது. இங்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு, இந்த அம்பேத்கர் சிலையின் வலது கையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இன்று காலை அப்பகுதி மக்கள், சிலையில் கை உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விசிகவை சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை காமலாபுரம் ரவுண்டானா பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர்களை கைது செய்யும் வரை மறியலை கைவிட மாட்டோம் என கூறினார். இதுபற்றி தகவலறிந்து ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சிலையை சேதப்படுத்தியவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, மறியலை கைவிட்டு மக்கள், விசிகவினர் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ambedkar , Ambedkar statue demolition: Public road blockade
× RELATED அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி...