×

ஐஎஸ்எல் கால்பந்து: கோவா எப்சி 2வது வெற்றி

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 25வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி-கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டி 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் கோவா எப்சி-பெங்களூரு எப்சி அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், 16வது நிமிடத்தில் பெங்களூருவின் ஆஷிக் குருணியன் சேம்சைடு கோல் அடித்தார்.

இதனால் கோவா 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 45வது நிமிடத்தில் பெங்களூருவின் கிளீடன் சில்வா கோல் அடித்து சமன் செய்தார். ஆனால் 70வது நிமிடத்தில் கோவாவின் தேவேந்திரா முர்கோன்கர் கோல் அடிக்க 2-1 என கோவா வெற்றிபெற்றது. 5வது போட்டியில் கோவா 2வது வெற்றியை ருசித்தது. 3ல் தோல்வி கண்டுள்ளது. 6வது போட்டியில் பெங்களூரு 4வது தோல்வியை சந்தித்தது. இன்று இரவு 7.30 மணிக்கு ஈஸ்ட்பெங்கால்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Tags : ISL Football ,Goa FC , ISL Football: Goa FC 2nd win
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து நாக்-அவுட் ஒடிஷா-கேரளா இன்று பலப்பரீட்சை